மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும்.

 

(காரைதீவு நிருபர் சகா) அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தாலும் முப்படையினர் ஊரடங்கை இறுக்கமாகக்கடைப்பிடித்தாலும் பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே கொடிய கொரொனாவை கட்டுப்படுத்தமுடியும்.

இவ்வாறு இலங்கை இராணுவத்தின் அம்பாறை மாவட்ட பிரிகேடியர் சிந்தக கமகே சம்மாந்துறையில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

சம்மாந்துறை பள்ளிவாசல்கள் சம்மேளன நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு -29- ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல்மஜித் மண்டபத்தில் நடைபெற்றது.

நம்பிக்கையாளர்சபைத்தலைவர் டாக்டர் எ.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இவ்வவைபவத்தில் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா பிரதேசசபைத்தவிசாளர்களான எ.எம்.நௌசாட்-சம்மாந்துறை- கே.ஜெயசிறில்-காரைதீவு உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அங்கு பிரிகேடியர் சிந்தக கமகே மேலும் பேசியதாவது

சட்டத்தை நாம் மதிக்கவேண்டும். தவறினால் கொரோனாவுக்கு நாம்பலியாகவேண்டிவரும்.துரதிஸ்டவசமாக எமக்குகிடைக்கின்ற செய்திகள் முஸ்லிம்களே அதிகமாக நோய்த்தொற்றுக்கு இலக்காகின்றார்கள் எனவும் சட்டத்தை மீறுகின்றார்களென்றும் கிடைக்கிறது. இரண்டு முஸ்லிம் கிராமங்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.

இதற்கு பலவேறு காரணங்களிருக்கலாம். அவர்களது சகோதரத்துவமுறைமை எமது ஊடகங்கள் சிங்களத்திலே அறிவித்தல்ககளை வழங்குவது போன்றவற்றைகுறிப்பிடலாம்.எனினும் இதுவரை அதிஸ்டவசமாகஅம்பாறை மாவட்டத்தில் ஒரு கொNருரானாத் தொற்றாளர் கூட இல்லiயென்பது மகிழ்ச்சிதரும்செய்தியாகும்.அதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிடமுடியாது. அரசின் சட்டதிட்டங்களை மதிக்கவேண்டும். அதற்காகவே பள்ளித்தலைவர்களை அழைத்து அவர்களுடாக கொரோனாவின் கொடுரத்தன்மையையும் அதிலிருந்து நாம் பாதுகாக்க கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றியும் இங்கு சொல்லுகிறோம்.

நாளை ஊரடங்கு நீக்கப்பட்டதும் பொதுமக்கள் முடிந்தளவு வெளியேவராமல் ஒருஇடத்தில் குவியாமல் பொருட்களை கொள்வனவு செய்யலாம். சகலவிதமான பொருட்களையும் உங்கள் காலடிக்குகொண்டுவர அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எனவே வெளியேவரவேண்டிய அவசியமில்லை.

அம்பாறை மாவட்டம் சட்டதிட்டங்களைகடைப்பிடித்து கொரோனா அற்ற மாவட்டமாக முன்மாதிரியாக மாற்ற உதவுவீர்களாகவிருந்தால் எமது மாவட்டத்தை தனிமைப்படுத்தி மாவட்டத்தள் சுதந்திரமாக நடமாட வைக்க எங்களால் முடியும். எனவே மக்கள் ஒத்துழையுங்கள். என்றார்.