மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு சமுகம் கொடுக்கவும் – பிரதேச செயலாளர்

0
201

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரங்களுக்கேற்ப நாளையதினம்(30) திங்கட்கிழமை குறித்த ஆவணங்களுடன் தாங்கள் மாத்திரம் பிரதேச செயலகத்திற்கு சமுகம்கொடுக்குமாறு, பட்டதாரிகளுக்கு சகல கிராமசேவை உத்தியோகத்தர்களுடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அதற்கமைய, நியமன கடிதம், பட்டப்படிப்பு சான்றிதழ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசு கடிதம் ( வேறு பல்கலைக்கழகம் எனில் ), தேசிய அடையாள அட்டை மற்றும் போட்டோ பிரதி, வங்கி கணக்கு இலக்கம் அடங்கிய வங்கி புத்தகத்தின் பிரதி போன்ற ஆவணங்களுடன் சமூகம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நியமன கடிதம் பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதனையும் வேறு எவரையும் அழைத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.