ஆறு கிராமங்கள் முற்றாக முடக்கம்

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (28) இரவு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீள அறிவித்தல் வழங்கப்படும் வரை இத்தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 60 வயதுடைய நபர் மாரவில-ஆல்பன்வில பகுதியைச் நேர்ந்தவர் என்பதால், அப்பகுதிக்குள் பிரவேசிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.