ஊரடங்கு காலத்தில் மீன் விநியோகம்

0
201

(கதிரவன் திருகோணமலை) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் மக்கள் பிரதான பொதுச்சந்தையிலும் மீன் சந்தையிலும் கணக்கில்லாமல் கூடுவதனை குறைக்கும் முகமாக மரக்கறி மற்றும் மீன் இறைச்சி பொருட்களை பரவலாக பிரதானமாக சில இடங்களில் பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. நேற்று (24.3.2020) கச்சேரியில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்க அதிபர், அனர்த்தமுகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், நகரசபை மற்றும் உப்புவெளி தவிசாளர்கள், வியாபார சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை பஸ்தரிப்பு நிலையத்திற்கருகில் உள்ள வாகனத்தரிப்பிடம்.
துறைமுகபொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக உள்ள பகுதி.
உவர்மலை பொலிசுக்கு முன்னால் உள்ள பகுதி.
மலையருவி சந்தைக்கு முன்னுள்ள பகுதி.
லிங்கநகர் அருகில் உள்ள நகரசபை காணி.
மட்டிக்களி பகுதி.
அலஸ்தோட்டம் முகாம் பகுதி.
நான்காம் கட்டை சந்தி.
அபேபுர சந்தி.
சிறிமாபுர விஜிதபுர
சாம்பல்தீவு பாலத்தடி.
திருகோணமலை பிரதான வீதி.

முதலிய பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு வியாபாரிகளை பிரித்து அனுப்புவது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தனுப்புவதற்கு சூவியாபாரிகள் சூபற்றாக்குறையாக இருப்பதனால் சூவிரும்பிய வியாபாரிகள் அல்லது வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

பொது மக்கள் இயலுமானவரை தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒருவிற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்.

மேற்குறித்த இடங்கள் தவிர்ந்து வீதியோர வியாபாரிகள் முதலில் உங்கள் கண்ணில்பட்டால் அவர்களிடமே கொள்வனவு செய்யுங்கள்.

ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்கு வீடு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரக்கறிஇமீன்இ இறைச்சி மற்றும் பேக்கரி உணவுப்பொருட்கள்இ போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக விநியோகம் செய்ய விரும்புவர்கள் இருந்தால் ஊரடங்கு சட்டநேரத்தில் உங்களுக்கான விசேட அனுமதி எடுத்து தருவதற்கு முயற்சிக்கலாம்.