கொரோனா தடுப்பு தெளிகருவிகள் 13பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிப்பு

0
244

 

(காரைதீவு நிருபர் சகா)கொரோனா தொற்றைத்தடுப்பதற்காக கல்முனைப்பிராந்திய சுகதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர்.குணசிங்கம் சுகுணன் தெளிகருவிகளையும்அதற்கான இரசாயனப்பொருட்களையும்வழங்கிவைத்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் வருகின்ற பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான சகல வைத்தியசாலைகளிலும் அத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பொதுச் சந்தைகள் பஸ்தரிப்பு நிலையங்கள்இ முக்கியமான அலுவலகங்கள் ஆகிய இடங்களை மக்களின் பாதுகாப்பு கருதி தொற்று நீக்கம் செய்யும் திட்டத்தின் அடிப்படையில் கல்முகைப் பிராந்தியத்தில் காணப்படும் 13 சுகாதார nவைத்தியஅதிகரிh பணிமனைக்கும் இயந்திர தெளிகருவியும் அதற்கான ஹைப்போகுளோரைட் இரசாயனம் என்பன போதிய அளவில் வழங்கப்பட்டது.

அத்துடன் கல்முனைப்பிராந்திய சுகாதாரப் பணிமனையில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தாலும் சுகாதாரத்துறையினர்பணியீடுபட்டதைக்காணமுடிந்தது.

பணிப்பாளர் டாக்டர்குண.சுகுணன் தெரிவிக்கையில்

நாங்கள் இருக்கும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து பொதுமக்களை இந்த கொடிய கொரோணா எனும் கொள்ளை நோயிலிருந்து பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டு எமது பணியை செய்கின்றோம். நீங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றினால் கொரோணா என்பது எமக்கு ஒரு நீர்க்குமிழியே.எங்கும் செல்வோம்எதிலும்வெல்வோம் மகிழ்ச்சி என்றார்.