இணையத்திற்கான டேட்டாவசதியை இலவசமாக வழங்கவேண்டும். பொதுமக்கள் கோரிக்கை.

0
310

(காரைதீவு நிருபர் சகா) நாட்டின் கொரோனா அவசரகால ஊரடங்கு நிலைகருதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளநிலையில் நாட்டிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் தொலைபேசி மற்றும் இணையத்தளடேட்டா வசதிகளை ஒருவாரகாலத்திற்காவது இலவசமாக வழங்கமுன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகளுக்குள் முடங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள இன்றையநிலையில் அம்மக்களுக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு சாதனமாக தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் இணையத்தளங்கள் உள்ளன.

சமகாலத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறுகுழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை தொலைக்காட்சி பார்ப்பதை விட ஸ்மார்ட்போன் பார்ப்பதில்மிகுந்த ஈடுபாட்டைக்கொண்டிருப்பது ஒன்றும் தெரியாதவிடயமல்ல. ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பாவனைப்பொருளாகிவிட்டது. தவிர்க்கவும் முடியாது.
அதுமட்டுமல்ல மாணவர்க்காக பலவித வினாவிடை நிகழ்ச்சித்திட்டங்களை கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் உட்படபல நிறுவனங்கள் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அனைத்திற்கும் இணையத்தளப்பாவனை அத்தியாவசியமாகின்றது.
இன்று சகல பரீட்சைகளும் ஏனைய கல்விவசதிகளும் நிகழ்நிலை அதாவது ஒன்லைன் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அதற்கான வசதிகளைவழங்காமல் ஒன்லைனில் விண்ணப்பியுங்கள் படியுங்கள் என்று கட்டளையிடுவது எத்துணைபொருத்தமென்பது தெரியாததொன்றல்ல.
அவற்றுக்காக அந்தவசதிகளை மக்கள்வெளியேசென்று அதனைப்பெறுவதென்பது ஊரடங்கு வேளைகளில் முடியாத காரியமாகும். அதுமட்டுமல்ல உணவுப்பொருட்களுக்காக பணம் தேவைப்படும்நிலையில் இவற்றுக்குப்பணம் செலவழிப்பது என்பது சிரமமாகும்.

முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு இக்கட்டான நிலையில்சிக்கியுள்ளது. இந்தக்கட்டத்தில் பொதுமக்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து ஒத்துழைக்கவேண்டியது கட்டாயகடமையாகும். அதுவும் மக்களுக்காகவே இத்தகையநடவடிக்கைகளைமேற்கொள்கிறார்கள் என்பதும்தெரிந்ததே.
வழக்கமாக புதுவருடத்தினங்களில் இவ்வாறான சலுகைகள் வழங்கப்படுவது வழமையாகும்.இம்முறை புதுவருடக்கொண்டாட்டம் என்பது கேள்விக்குறியாகும்.
எனவே மக்களால் உழைத்து பெருமளவு விளம்பரத்திற்காகச்செலவிடும் இந்நிறுவனங்கள் மக்கள்இவ்வாறான துன்பகரமானநிலையில் முடங்கிக்கிடக்கையில் அவ்வாறான சலுகைகளை வழங்குவது ஒருபுறம் தார்மீகக்கடமையுமாகும்.

இன்றைய நாட்டின்சமகாலத்தில் பெரும்பாலான தொழிற்றுறைகள் வர்த்தகம் வியாபாரம் பாரியவீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள இந்தவேளையில் வழமைக்குமாறாக உயரிய பாவனையில் அதிகலாபத்தோடு செயற்படுவது இத்தகவல்தொடர்பு நிறுவனங்களாகும்.

எந்த மக்களால் உழைத்தார்களோ அந்த மக்கள் தேசிய நெருக்கடியில்சிக்கித்தவிக்கும்போது இத்தகைய சலுகைகளை வழங்கவேண்டியதும் கட்டாயம் கவனத்திற்கொள்ளப்படவேண்டியதே.

இது தொடர்பில் கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேசசபை பல உள்ளுராட்சி நிறுவனங்களின்பிரதிநிதிகள் மேற்படி சலுகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.