நாளை ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பயனாளிகளுக்கான சிரேஸ்ட பிரஜைகள் கொடுப்பனவு

0
140

ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பயனாளிகளுக்கான சிரேஸ்ட பிரஜைகள் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த உதவிப் பணம் என்பன எதிர்வரும் 26.03.2020 (வியாழக் கிழமை) மு.ப 09.30- 11.30 வரை குறித்த பிரிவின் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாக வழங்கப்படவுள்ளது.

பயனாளிகள் பாதுகாப்பான முறையில் வருகைதந்து தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலதிக விடயங்களுக்கு பிரிவின் கிராம உத்தியோகத்தரைத் தொடர்புகொள்ளவும்.

பயனாளிகள் அதிகம் முதியவர்களாகவும் நோயாளிகளாகவும் காணப்படுகின்றமையினால் தற்போதைய அசாதாரண நிலையில் அனைவரதும் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டிய அறிவுரைகளை (மாஸ்க் அணிதல், மற்றைய நபருக்கிடையிலான இடைவெளி போன்றவற்றை) வழங்கி அனுப்பிவைக்குமாறு குடும்ப உறுப்பினர்கள், பாதுகாவலர்கள் வேண்டப்படுகின்றார்கள்.

அனைவரின் ஒத்துழைப்புக்களும் பெரிதும் வேண்டப்படுகின்றது.