கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரே நாட்டில் முதன்முறையாக தொற்றுக்குள்ளான இலங்கையராக இனங்காணப்பட்டார்.

அங்கொடை IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கடந்த 11 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.