கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 77 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் 245 பேர் கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.