தாழங்குடா விளையாட்டு கழகங்களிற்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 

மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேசத்திற்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள விளையாட்டு கழகங்களிற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் வழங்கி வைத்தார்.
.
இந்நிகழ்வுகளில் உரையாற்றும் போது ‘விளையாட்டு கழகங்கள் தங்கள் கிராமங்களில் நல்ல காரியங்களில் செயற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த முன்னோடிகளாகவும்இ கிராமங்களில் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள்இ கிராம பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.