வாலிபர் முன்னனியினர் வைத்தியசாலைக்கு வர்ணம் பூசினர்.

களுவாஞசிகுடி ஆதார வைத்தியசாலையின் கட்டிடங்களுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னனியினர் வர்ணம் பூசும் பணியினை மேற்கொண்டனர்.

மேற்படி நிகழ்வானது வாலிபர் முன்னனியின் தலைவர்; மற்றும் செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை மேற்கொள்ளப்பட்டது. பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைது சிறப்பாக மேற்கொண்டனர். மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் நடராசா பட்டிருப்பு கிளை பொருளாளர் நடராசா ஆகியோர் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.