இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு

யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் சேவைபுரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபைக் கிளை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வு இடம்பெற்றுவருகின்றன.
இந்த திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தது..
அதற்கமைய அமைச்சரவை அங்கிகாரத்தின் பின்னர் இந்த வருடம் ஜனவரி மாத இறுதி வாரத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிறமங்களை குறைக்கும் முகமாக,அவர்களால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்வதற்கான விரைவான ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.
பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா  உடனடியாக பிரிகேடியர் ஐ.பி கந்தனஆராச்சியை நெல் பயிர்செய்கை இடம்பெறும் பிரதேசங்களான யாழ்,வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு ஆகிய பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் ஒத்துழைப்போடு தங்களது செயற்பாடுகளை விரைவுபடுத்த நியமித்தார்.
இராணுவ தலைமையக தகவலின்பிரிகாரம், புதன் கிழமை 12ஆம் திகதி மாலை வரை ரூபா 209,620,500/= பெறுமதியில் 4,192,410 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற் கொள்வனவில் ‘கீரி சம்பா, சிவப்பு நெல்,பெரிய சிவப்பு நெல் ஆகிய வகைநெல் வகை , நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் மாவட்ட செயலகங்களினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ளன.