வவுணதீவு பகுதியில் இருவர் கைது

0
245

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காந்திபுரம் பிரதேசத்தில், 16 ஆயிரம் 500 மில்லிலீற்றர் கசிப்பு எடுத்துச் சென்ற வேவ்வேறு சம்பவங்களில், இருவரை நேற்று வியாழக்கிழமை (13) இரவு கைது செய்ததாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சைக்கிள் ஒன்றையும்  மீட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பவதினமான நேற்று இரவு 8 மணியளவில், வவுணதீவு –  காந்திபுரம் சந்தியில், பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெகஸ்டர் அஜத் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில், கலன் ஒன்றில் 15 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பை எடுத்துச் சென்ற பனையறுப்பான் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

இதன்பின்னர், இதே பிரதேசத்தில் சைக்கிளில் ஆயிரத்து 500 லீற்றர் கசிப்பை எடுத்துச்சென்ற காந்திநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் ​சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.