கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க பொலிசார் நடவடிக்கை

0
126
கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க பொலிசார் நடவடிக்கை
எதிர்கால சந்ததியினரை ஒழுக்கநெறிஉள்ள சிறந்த தலைவர்களை உருவாக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் நாடெங்கும் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகளை உருவாக்கும் விசேட திட்டத்தை தற்போது திருப்திகரமாக நடைமுறைப் படுத்திவருகிறது.
பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் மேற்பார்வை பொலிஸ் உத்தியோகஸ்தரின் ஏற்பாட்டில் இந்த பொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஏற்பாட்டுக்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இந்தமாணவர் சிப்பாய் படையனியினரை அமைக்கும் திட்டம் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தபடையனியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறைபொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தககுணவர்த்தன தெரிவித்தார். இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபது பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள படையணியில் இணைந்து கொண்ட மாணவர்களையும் பொற்றோர்களையும் மற்றும் பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும் விசேடநிகழ்வு மெதடிஸ்த மத்தியகல்லூரி ஒன்று கூடல்மண்டபத்தில் இன்று (12) நடைபெற்றது.
இந்த படையணியின் மட்டக்களப்பு மாவட்ட மேறபார்வை பொலிஸ் அதிகாரி வை. கிளஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிபணிப்பாளர் சிந்தககுணரத்ன சிறப்பு அதிதியாககலந்துகொண்டார். இந்த சந்திப்பில் பாடசாலை அதிபர்கள்; குறித்த படையை சார்ந்த பொறுப்பாசிரியர்கள் இணைக்கப்பட்ட பல் வேறு பாடசாலையின் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இதேபோல ஏனைய அரசதொழில் வாய்ப்புகளுக்கும் நேர்முக பரீட்சைக்க சமூகளிக்கும் வேளைகளில் இச் சான்றிதல் மேலதிக தகமைகளாகவும் கருதப் படுகின்றது.
எனவே மாணவர்கள் புத்தகக் கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்தாது இப் படையணியில் இணைந்து கொண்டு நல்லதேகாரோக்கியத்தையும் மற்றும் மேலதிகதகமைகளையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இந்த நிகழ்வில் குறித்தபடையணி செயற்பாடுகளில் திறமைகாட்டிய பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின்மாணவர்களுக்குசிறப்புசான்றிதல் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கும் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டது.
இன் நிகழ்வில்கிழக்குமாகாணமேற்பார்வைஅதிகாரிபொலிஸ் பரிசோதகர் எல்.பி. அஜித் பிரசன்ன,மட்டக்களப்புதலைமைநிலையபொறுப்பதிகாரிஏ.எஸ்.ஆர். ஹெற்றிஆராய்ச்சி,படையணிபயிற்சிஉத்தியோகஸ்த்தர் விஜிதாஉட்படபலபொலிஸ் அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
இச் சந்திப்பின் போது இலங்கைப்பொலிஸ் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டசெயற்பாடுதொடர்பானவீடியோபடக்கட்சியும் காண்பிக்கப்பட்டது.
பணிப்பாளர் இங்குகருத்துவெளியிடுகையில் விளையாட்டுதேகாப்பியாசம் மற்றும் புறக்கிருத்தியநடவடிக்ககைகளில் ஈடுபாடுகாட்டாதுபாடசாலைகல்வியில் பாத்திரம் கவணம் செலுத்தும் மாணவர்களுக்குமுழுமையான மூளை விருத்திஏற்படாமலிருக்க இடமிருக்கின்றது. எனவேமாணவர்களைஎதிர் வரும் காலங்களில் கல்வியுடன் விளையாட்டுமற்றும் புறக்கிருத்தியசெயல்களில் கவனம் செலுத்தசெய்யவேண்டியதுஆசிரியர்களின் தலையாயகடமையாகும்.
இந்தமாணவர் சிப்பாய் படையணியில் இணைந்துகொள்ளும் மாணவர்கள் சிறந்ததலைவர்களாகவும் ஒழுக்கப் பண்புள்ளவர்களாகவும் உருவாகுவதற்குநல்லசந்தர்ப்பம் காத்திருக்கின்றுது. இந்தபடைஅணியில் இணைந்துகொண்டமாணவர்கள் பெறும் சான்றிதல்கள் பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படுவதுடன் பல்கலைக்கழகம் உட்பிரவேசிப்பதற்குமேலதிகபுள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.