அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் நெல் கொள்வனவு

அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்சயம் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவுச் சபையின் தலைவர் ஜே.டி மானப்பெரும தெரிவித்தார்.

நெல் கொள்வனவுச் சபை இதுவரையில், விவசாயிகளிடம் இருந்து 2 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்த சபையின் தலைவர் பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்டங்களில் அதிகளவான நெல்லை கொள்வனவு செய்ய, நெல் கொள்வனவு சபை தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். .