அறநெறி பாடசாலையின் அரும்பணி.

 

இந்து சமய கலசார அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறி கல்வி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு
எருவில் அறநெறி பாடசாலையினால் தியான பயிற்சி இன்று(09) சிறப்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மாவட்டத்தில் இயங்கும் அறநெறி பாடசாலைகளுக்கு தியானப்பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் எருவில் அறநெறி பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களை
உள்ளடக்கிய வகையிலான பயிற்சி இன்று அறநெறி பாடசாலை அதிபர் கவிஞர் நவ கனகரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்தவைக்கப்பட்டது.
தியான பயிற்சியினை பயிற்சி ஆசிரியர் கேதாரம் ராஜன் அவர்கள் வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்துமத தத்துவார்த்த கதைகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான கருத்துத்துரைகளும்
ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வுகளின் போது பாடசாலை அதிபர் திரு சீ.சத்தியநாதன் அவர்களின் பிரசண்னமும் காணப்பட்டது.