அரசு இனப்பரம்பலை அதிகரிக்க வைப்பதற்கு மறைமுகமான திட்டமிட்ட சிங்களக் குடியற்றத்தை செய்கின்றனரா? – இரா.துரைரெத்தினம்

மாவட்டத்தில் எல்லைப்புறங்களிலுள்ள அரசுக்குச் சொந்தமான மகாவலிக்குரிய காணிகள், வன இலாகாவிற்குரிய காணிகளில் மத்திய அரசு இனப்பரம்பலை அதிகரிக்க வைப்பதற்கு மறைமுகமான திட்டமிட்ட சிங்களக் குடியற்றத்தை செய்கின்றனரா? இதைதடுத்து நிறுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாண சபைசிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் அரசுக்கு பகீரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

மாவட்டத்தில் அண்ணளவாக ஏழு இலட்சம் ஏக்கர் காணிகள் உள்ளநிலையில் கோறளைப்பற்றுவடக்கு (வாகரை),கோறளைப்பற்றுதெற்கு(கிரான்), ஏறாவூர்பற்று (செங்கலடி), மண்முனைமேற்கு(வவுணதீவு) போன்ற பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள மகாவலி, வனஇலாகவிற்குரிய காணிகளில் பலதசாப்பதகாலமாக ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கென மேச்சற்தரையாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

இப்பிரதேசங்களில் கால்நடைப்பண்ணையாளர்களுக்கும், விவசாயம் செய்வோருக்கும் இடையில் ஒவ்வொரு வருடங்களும் தொழில் நிமித்தம் காரணமாக முரண்பாடுகள் வருவது குறிப்பிடத்தக்கதாகும். இப் பிரதேசங்களை கால்நடைகளுக்கென வரையறை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2017ம் ஆண்டுக்குப்பின் இப்பிரதேசங்களில் எல்லா இனமக்களும் போக்குவரத்துச் செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டதற்குப் பிற்பாடு இக் காணிப் பகுதியில் உள்ளவர்களாலும், ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்தபெரும்பான்மை இனத்தவர்களாலும் கெவிலியாமடு, விச்சித்திடல், மங்களகம எல்லைப்பகுதி, மாதவணை, மயிலத்தமடு, புணானை, ரிதிதென்ன பகுதிலுள்ள மகாவலிக்குச் சொந்தமான பகுதிகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.1986ம் ஆண்டு17 குடும்பங்கள் உள்ள இடத்தில் 2020ம் ஆண்டு 250 குடும்பங்களாகஉள்ளநிலையில் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் மிகவும் விரைவாக குடியேற்ற வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இது ஒருவகையான சிங்களக் குடியேற்றமா? இக் குடியேற்றத் திட்டத்திற்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதியார் வழங்கியது? என்னும் கேள்வி சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ளன. முப்பதுவருடங்களுக்கு மேலாக இடம் பெயர்ந்து 2017ம் ஆண்டுக்குப் பின் மீளக்குடியமர்வதற்குச் சென்ற மண்டூர் பாலமுனை இராணுவமுகாம் இருந்த இடங்களில் மக்களுக்கு விசேடதிட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்காத அரசு எவ்வாறு ஏனைய பகுதிகளுக்கும் ,புதிதாக குடியேறியவர்களுக்கு கடந்தகால அரசுவீடுகளை வழங்க அனுமதியளிக்க முடியும்.

எனவே இப்பகுதிகள் தொடர்பாக திட்டமிட்ட குடியேற்றம் மேற்கொள்வது ஊடாக அப்பிரதேசங்களில் இனப்பரம்பலை அதிகரிக்கவைப்பதற்கும், சூட்சிகள் நடந்தேறிவருகின்றன. இதேநேரம் கெவிலியாமடுக் கிராமத்தில் தமிழர்களுக்குரிய நுர்று ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட நிலையில் அக் காணிகளுக்குரிய உரிமையாளர்கள் இன்றும் கூட காணிகளைப் பெறமுடியாது பல முறைப்பாடுகளைச் செய்தும் இவர்களுக்குரிய பதில் காணிகளோ அல்லது இவர்களுக்குரிய சொந்தக்காணிகளையோ வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதே கடந்தகாலச ம்பவங்களாகும்.

எனவேஎல்லைக் கிராமங்களில் மேச்சற்தரைக்கென பயன்படுத்தி வருகின்ற காணிகளை விவசாயச் செய்கைக்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் மேச்சற்தரைக்கான இடங்கள் இல்லாமல் அழிவடைவதுடன் ஊடாகபலநூற்றுக் கணக்கானவர்கள் பொருளாதார கஸ்டத்தை எதிர் நோக்குவார்கள். இவை மட்டுமின்றிவன இலாகாவிற்குரிய அதிகாரிகளும், ஒருசில ஊர்காவல் படையினரும் கால் நடைப்பண்ணையாளர்கள் மீது ஒருமறை முகமானஅழுத்தத்தைபிரயோகிக் கின்றனராஎனும் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இக்குடியேற்றம் தொடர்பாகவும், மேச்சற்தரைக்காணிகளை பயன்படுத்துவது தொடர்பாகவும் வனஇலாகா, ஊர்காவல்படைபோன்றவர்களால் மேற் கொள்ளப்படுகின்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பகீரங்கவேண்டுகோள் விடுத்துள்ளார்.