மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

0
206

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள  இந்துக்கல்லூரியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை  16ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் இரா.சண்டேங்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழவில்,  மட்டக்களப்பு  கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளரும், பாடசாலை மேம்பாட்டுத்திட்ட  இணைப்பாளருமான வ.லவக்குமார், பாடசாலையின் பிரதி அதிபர் கு. பாஸ்கரன், உதவி அதிபர் ஏ.பிரியகாந்தன், பழைய மாணவர் சங்க பிரதிநிதி ரீ.மதன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

 

இதன்போது முதலாம் தர மாணவர்களை தற்போது இரண்டாம் தரம் கல்வி பயிலும் மாணவர்களால் மாலை அணிவித்து  பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு  பாடசாலைக்கு வரவேற்கப்பட்டனர்.

மாணவர்கள் வரவேற்பின்போது பாடசாலை மண்டபத்தில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.

புதிதாக இங்கு வருகைதந்திருக்கும் மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜைகளாக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும் இதற்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து அற்பணிப்புடன் செயற்படவேண்டும். என பாடசாலை அதிபர் இரா.சண்டேங்வரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து சிறப்பித்தனர்