சுமந்திரன் தலைவாரா, மாவை தலைவரா என்பதை திர்மானிப்பது தமிழ்தேசியகூட்டமைப்பே அன்றி மாற்று கட்சிகள் இல்லை!

0
193
சுமந்திரன் தலைவாரா, மாவை தலைவரா என்பதை திர்மானிப்பது தமிழ்தேசியகூட்டமைப்பே அன்றி மாற்று கட்சிகள் இல்லை!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ,

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் ஐயாதான் அதில் மாற்றுக்கருத்தில்லை அப்படி அவர் தலைவராக இருக்க விரும்பாவிட்டால் ஏனய தமிழ்தேசி கூட்டமைப்பு உறுப்பினர்களில் யார் தலைவர் சுமந்திரனா ? இல்லை மாவை அண்ணரா அல்லது வேறு யாராவது ஒருவரா என தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே அன்றி வேறு கட்சிகளுக்கு அந்த உரிமை இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

“சுமந்திரன் தலைவராவது தமிழினத்துக்கு சாபக்கேடு” என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன் கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது மேலும் கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவராக தொடர்ந்தும் சம்பந்தன் ஐயா செயல்படுவார் அவரை மாற்றும் தேவை எமக்கு தற்போது எழவில்லை அவர் பாராளுமன்ற தேர்தலில் எதிர்வரும் காலத்தில் போட்டியிடுவதில்லை என மட்டும் கூறியுள்ளார் அந்த முடிவு சிலவேளை திருகோணமலை மாவட்ட மக்கள் விரும்பினால் போட்டியிடுமாறு கோரவும் வாய்ப்புகள் உள்ளன அதை பொறுத்திருந்து பார்கவேண்டும்.
அப்படி தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவராக அவர் தொடர்ந்தும் பணிபுரிவார். சிலவேளை அவர் தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவராக இருக்க தான் விரும்பவில்லை என கூறும் சந்தர்பம் ஏற்பட்டால் வேறொரு தலைவரை தீர்மானிப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளே அன்றி தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள கட்சிகளோ அல்லது குழுக்களோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான எந்த கட்சிகளோ இல்லை.
தமிழ்தேசி கூட்டமைப்பு தலைவர் யார் என்பதையிட்டு மாற்று கட்சிக்காறர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை கனவும் காணத்தேவையில்லை அந்த கவலைக்கு மருந்து எம்மிடம் உள்ளது.

இன்னும் கூறுவதானால் சுரேஷ்பிரமச்சந்திரனோ,விக்கினேஷ்வரனோஆனந்தசங்கரியோ,சிவாஜிலிங்கமோ,ஶ்ரீகாந்தாவோ அல்லது வேறு யாராவதோ தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரை தீர்மானிக்கும் எந்த அருகதையும் இல்லை அந்த அருகதையில் இருந்து அவர்களே விலகிவிட்டனர். பின்னர் ஏன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் யார் என்பதைபற்றி இவர்கள் சிந்திக்கவேண்டும் கவலை கொள்ளவேண்டும் அந்த சிந்தனை கவலை அவர்களுக்கு இருக்குமாயின் மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயனித்துக்கொண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதே நல்லது.

தமிழினத்தை தலைமைதாங்க கூடிய தகுதி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே வடக்கு கிழக்கு மக்கள் விடுதலைப்புலிகளின் முள்ளிவாய்க்கால் மௌனத்துக்குப்பின்பு இருந்து இன்றுவரையும் பல தேர்தல்களில் ஜனநாயகரீதியாக நிருபித்துள்ளனர் மக்களின் ஆணையை தந்துள்ளனர் எதிர்வரும் தேர்தல்களிலும் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மீண்டும் ஆணையை தருவார்கள் அதில் மாற்றுக்கருத்தில்லை
தமிழ்தேசிய்கூட்டமைப்பு தலைவராக சம்பந்தன் ஐயா தலைமையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய்கூட்டமைப்பு பிரசார்நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன் எடுத்து மீண்டும் தமிழ்மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிபெறுவோம் இப்போதைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் வெற்றிடம் ஏற்படவில்லை இதையிட்டு யாரும் அலட்டத்தேவையில்லை எனவும் மேலும் கூறினார்.