காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம். ஊடக வெளியீடு

15 ஜனவரி 2020
2016ம் ஆண்டின் 14ம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (தாபித்தலும், நிர்வகித்தலும்
பணிகளை நிறைவேற்றலும்) சட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க முயற்சி எடுக்கவுள்ளதென சமீபத்திய ஊடகறிக்கைகள் குறிப்பிடுகின்றன. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அதிமேதகு ஜனாதிபதி
கோதாபாய ராஜபக்ஷ அவர்கள், மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மாண்புமிகு நீதி மற்றும்;மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருடன் 09 ஜனவரி 2020 ம் திகதியிடப்பட்ட
கடிதங்களின் மூலம் உத்தியோகபூர்வமாக தொடர்புகொண்டது.

அரசாங்கத்துடனான தனது தொடர்புகளில்காணாமல் போனோர் அலுவலகமானது, காணாமல் போன மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டோரினது குடும்பங்களின்
நீண்டகால கோரிக்கைகளின் அங்கீகாரமாகவும், காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோருடன்தொடர்புடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் கடந்த அரசாங்கங்கள் பொறிமுறைகளில் கண்டதோல்விகளையும் பரிந்துரைகளையும் வெளிப்படுத்துவதற்குமாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்தாபிக்கப்பட்டது என மேற்கோளிட்டு காட்டியுள்ளது.
சிவில் யுத்தம் மற்றும் தெற்குப் பகுதி கிளர்ச்சிகள் உள்ளடங்களாக பல்வேறு காரணிகளினால் கடந்த நான்குதசாப்தங்களாக பரவலான காணாமல் போதல்களினால் இலங்கையானது பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளது
என்பதையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மீளநினைவூட்டியது. கடந்த மூன்று தசாப்தங்களில்பல்வேறு அரசியல் கட்சிகளிற்கு உரித்தாக தொடர்ந்த அரசாங்கங்களானவை பெருமளவிலான ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழுக்கள் உள்ளடங்களாக வரையறுக்கப்பட்ட பணிப்பாணைகளுடன் கூடிய தற்காலிக
பொறிமுறைகளை தாபித்தலினூடாக காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினைகளைகண்டறிய விளைந்தன.

2011ம் ஆண்டிலான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போன்ற
முன்னைய பொறிமுறைகள் என்பவை காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்படைய
பிரச்சினைகளை விசாரிக்க பரந்த பணிப்பாணை மற்றும் வலுவான விசாரணை தத்துவங்களுடன் கூடியநிரந்தரமானவொரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்க பரிந்துரைத்துள்ளன என்பதையும் காணாமல் போன
ஆட்கள் பற்றிய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகமானது 2018ல் நிரந்தரமானதும் சுயாதினமாதும் ஏனைய சுயாதீனஆணைக்குழுக்களுக்கு ஒத்ததாகவும் தாபிக்கப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலத்தின்பணிப்பானையானது எந்தவொரு குறித்த காலப்பகுதியிற்கோ, வலயத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ என
வரையறுக்கப்படவில்லை என்பதுடன் சட்டத்தின் 27ம் பிரிவின்படி, இதன் பணிப்பாணையானது காணாமல் போனோர் என்பது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தததுடன் தொடர்புடையதாய், அரசியல் அமைதிக்குலைவு அல்லது
குடியியல் குழப்பங்கள் காரணமாக காணாமற்போனவர்களையும ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களையும்அல்லது காணாமற் போனவர் என அடையாளம் காணப்படுகின்ற ஆயுதம் தாங்கிய படைகளின் அல்லதுகாவல்துறையின் உறுப்பினராகவுள்ளவர்களையும் வெளிப்படையாக உள்ளடக்குவதாகின்றது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது, சட்டத்தின் பிரிவு 10(1) ன் சரத்துக்கள்

அ) காணாமல் போனஆட்களை தேடுவதற்கும் கண்டறிவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்

ஆ) ஆட்கள்எச்சூழ்நிலைகளில் காணாமற்போனார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்

இ)காணாமற் போன ஆட்களினதும் அவர்களின் உறவினர்களினதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாத்தல்.
ஈ) நிவர்த்திக்கான வழிகளை அடையாளம் காணுதல் உ) காணாமல் போனோர் தொடர்பான தரவுகளை சேகரித்தல்
என பணிப்பாணைகளை உடைய ஒரு விசேட தாபனமாக காணப்படுகின்றது. முன்னைய ஜனாதிபதிஆணைக்குழக்களினால் அறிவிக்கப்பட்டதின் பிரகாரம் காணாமல் போனோர் மற்றும்காணாமல் ஆக்கப்பட்டோர்
குறித்த, சிக்கல்கள் உள்பொதிந்த பணிகளான விசாரணைகளிற்கு கோரும் வலுவான விசாரணைதத்துவங்களாலேயே, சட்டத்தின் பிரிவு 12(அ) (i) பிரகாரம் காணாமல் போனோர் அலுவலகம் வலுவூட்டப்பட்டுள்ளது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் அதிமேதகுமுன்னாள் ஜனாதிபதியினால் பெப்ரவரி மாதம் 2018 ல் ஏழு ஆணையாளர்களின் நியமனத்தைத் தொடர்ந்துதாபிக்கப்பட்டது. இதன் முதலாவது வருடத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது
பெருமளவிலான மாவட்டங்களில் பொதுமக்கள் ஆலோசனை மையங்களை ஒழுங்கமைத்து காணாமல் போனோர்மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரினது குடும்பங்களை சந்தித்தது. நாடாளாவிய ரீதியிலாக பல குடும்பங்கள்
தங்களது துன்பங்களை விவரித்ததுடன் நஷ்டஈடு வழங்குவதை மாத்திரமே கவனத்தில் கொண்டமைஉள்ளடங்கலாக அரசின் கடந்த கால தோல்விகளை முதன்மைப்படுத்திக்காட்டினர். வலயம் மற்றும் சமூதாய
பாரபட்சமின்றி அனைத்து குடும்பங்களும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசாரணைகளைமேற்கொள்ளவும் காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களின் நிலை என்ன
மற்றும் எங்கிருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற கோரிக்கைகளைளே முன்வைத்தனர்.
கடந்த 22 மாதங்களில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது கொழும்பில் அதன் தலைமைஅலுவலகத்தையும் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு என நான்கு பிராந்தியஅலுவலகங்களையும் செயற்படுத்தியுள்ளது.
எந்தவொரு திருத்தமும் பாராளுமன்றினாலேயே இயற்றப்படவேண்டுமெனினும் சட்டத்திற்கு திருத்தங்களைபிரேரிப்பது அரசாங்கத்தின் தனியுரிமை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை அதன் முற்கூறியதொடர்பாடலின் போது குறிப்பிட்டிருந்தது.

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள்மற்றும் அத்தகைய குடும்பங்களுடனும் காணமால் போனோர் அலுவலகத்துடனும் பணியாற்றும் நிறுவனங்களினதும்பரந்த ஆலோசனைகளைப் பின்பற்றியதாகவே பிரேரிக்கப்படவுள்ள சட்டத்திற்கான திருத்தங்கள் அமைந்திருக்கவேண்டுமென காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது. அவ்வாறு செய்யும் பொழுது காணாமல்போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களின் நிலை என்னவென்பதை புரிந்துக்கொள்ளஅக்குடும்பங்களிற்கு உள்ள உரிமையையும் குடும்பங்களின் தேவைகளையும் மனம் கொள்ளுதல்அவசியமாகுமெனவும் கருதுகின்றது.

சாலிய பீரிஸ்,

ஜனாதிபதி சட்டத்தரணி,
தவிசாளர்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்.