பாண்டிருப்பில் வீடு எரிந்து நாசம் முனைப்பினால் உதவிகள்.

பாண்டிருப்பு – 2 இல் வீடு எரிந்து முற்றாக சேதமடைந்த குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் உதவி வழங்கியுள்ளது.

மிகவும் வறிய நிலையில் உள்ள இக் குடும்பத்தின் வீடு எரிந்ததினால் தொழில் உபகரணம் மற்றும் உடுதுணிகள் , பாவனைப்பொருட்கள் முற்றாக அழிந்துள்ளது.இந் நிலையில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர்  மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களான ச,சிவசுந்தரமூர்த்தி,௧.விவேகானந்தராசா ஆகியோர்  சம்பவ இடத்துக்குச்சென்று உடுதுணிகளைப் பெற்றுக்கொள்ள நிதி உதவி வழங்கியதுடன் பாடசாலை செல்லும் மாணவிக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கிவைத்துள்ளனர். .

முனைப்பு ஸ்ரீலங்கா தன்னார்வ நிறுவனமானது இனமத, பேதம் கடந்து பிரதேச மாவட்ட எல்லை தாண்டி எமக்கு உதவியமைக்கு பெரிதும் நன்றிபாராட்டுகிறது என உதவி பெற்ற குடும்பத்தலைவர் கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது