மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நடவடிக்கை குறித்து விசாரணை

0
699

(தாமரைக்கேணி) மட்டக்ககளப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் அண்மைய நடவடிக்கைகள் பற்றி பூர்வாங்க விசாரணையொன்றை நடத்துமாறு தமது அமைச்சின் மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்தார்.

அவர் இதுபற்றி விபரிக்கையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், பல ஒழுங்கீனங்கள் இடம்பெற்றுவருவதாக எமது அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை தவிர கிழக்கு மாகாண ஆளுனரது கவனத்துக்கும் அவைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதலால் அவைபற்றி முழுமையாக ஆராயாவேண்டியுள்ளது. அண்மையில் இடம்பெற்றிருக்கும் நியமனங்கள், இடமாற்றங்கள், பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் என்பன அவற்றுள் அடங்கும். இதைவிட இக்கல்விப் பணிமனை தனக்கு உரித்தான அதிகாரங்களுக்கு மேலதிகமான விடயங்களை கையாண்டுள்ளதா? என அவ்விசாரணையின் போது கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.