உளவியல் ஆலோசனை மையம் (PAC) குழுமத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு!

0
188

(கேதீஸ்)

உளவியல் ஆலோசனை மையம் ( PAC) குழுமத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த நான்காம் திகதி மட்டக்களப்பு  கிரிபோஜன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிக்வில் அங்கத்தவர்கள், ஆலோசகர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கடந்த ஆண்டு 04/01/2019 அன்று  உளவியல் ஆலோசனை மய்யம்  இலங்கையில் உருவாக்கப்பட்டாலும் குறுகிய காலத்தில் சமூகத்திற்கு அவசியமானதும் ஆக்கபூா்வமானதுமான பல்வேறு சேவைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2009 – 2018 வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடகிழக்கு பிரதேசங்களில் அதிகரித்துவரும் தற்கொலைகள் ஏற்படுத்திய தாக்கமே குறித்த அமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்தது.

மன உளைச்சலுக்கு ஆளானவர்களை சந்தித்து அவர்களை மன உளைச்சலில் இருந்து விடுபட வைப்பதோடு அவர்களுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுப்பது, தலைமைத்துவப்பயிற்சிகளை மாணவர்கள் மட்டத்தில் வழங்குவது,
கற்றலில் பின்தங்கியோரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான செயல்திட்டங்களை முன்னெடுப்பது, மாற்றுதிறனாளிகளுக்கு அவர்களின் நம்பிக்கையை வளர்க்க உள ரீதியான ஆற்றுப்படுத்தலை வழங்குவதென சில குறிப்பிட்ட வரையரைக்குள் இந்த அமைப்பு இலங்கையில் நிறுவப்பட்டு தனது சேவைகளை முன்னெடுத்துவருவதுடன்   சமூத்தில் நேரடியாக தேவையுடையோர்களை கண்டறிந்து அவர்களை சமூகத்தில் மீள இணைத்ததோடு பல்வேறுபட்ட சமூகப்பணிகளிலும் PAC குழுமம்  ஈடுபட்டு வருகின்றது.

கடந்த ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி ஊக்கிவிப்புக்கள் கலைகலாசார நிகழ்வுகள் போதைவஸ்துக்கு அடிமையானோர்களை கண்டறிந்து அவர்களை சமூகததில் மீள இணைப்பது  சமூக மாற்றத்துக்கான அமைப்பாக கடந்த ஓராண்டில் PAC குழுமம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் சிறந்த அர்ப்பணிப்புடன் கூடிய உறுப்பினர்களுக்கான விருதுகளும், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில், அமைப்பின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கிவரும் மட்டக்களப்பு கல்விவலயத்துக்கு சிறந்த அனுசரணையாளர் என்ற கெளரவ விருதும், அத்தோடு  செயற்திட்டங்களில் நேரடியாக பங்களிப்பு செய்துவரும் திருகோணமலை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கு சிறந்த அனுசரணையாளருக்கான கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன்  PAC குழுமத்தின் ஆலோசகர்களான பியோ ஜூட் நவிந்தன், சிந்தாத்துரை பெஞ்சமின் ஆகியோருக்கும் அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவையை பாராட்டி நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.