மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு தேசியத்தில் முதலிடம்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு தேசிய ரீதியில் முதலிடம் கிடைக்கப்பெற்றள்ளது.

ஆரம்ப சுகாதார அமைப்பில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றியதன் அடிப்படையிலேயே தேசியத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று(08) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

சுகாதார மற்றும் சுதேசமருத்துவ சேவை அமைச்சினால் முதலிடத்திற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி, வாய்ப்புக்கள் குறைவுடன் காணப்படுகின்ற படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலையொன்று, இவ்வாறு தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலை, குறிப்பிட்ட சில வருடங்களாக உற்பத்திதிறன் போட்டியிலும் தேசிய ரீதியில் வெற்றி பெற்று வருகின்றமை எடுத்துக்காட்டத்தக்கது.