விமானம் விபத்து, ஹப்புத்தளையில் சம்பவம்.

பதுளை – ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்றைய தினம் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், அது குறித்த CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற இலகுரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், தாழ்வாக விமானம் பறந்தமையே விபத்துக்கான காரணம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிதிருந்தார்.
இந்நிலையில், குறித்த விமான விபத்து தொடர்பிலான CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.