மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2020 ஆண்டு ஐனவரி 1ம் திகதி அரச பணியாளர்கள் கடமைகளை தொடங்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொண்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள், உதவிமாவட்ட செயலாளர் , பிரதம கணக்காளர்கள், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என சகலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த அரசாங்க அதிபர் சகல உத்தியோகத்தர்களும் வினைத்திறன் மிக்க பேண்தகு சேவையினை பயன் மிக்கதாகவும் அற்பணிப்புடனும் நேர்மையாகவும் மக்களுக்கு பக்க சார்பின்றிய சேவையினை நிறைவேற்ற வேண்டும் எனவும் இம் மலர்ந்திருக்கும் புத்தாண்டின் சகல உத்தியோகத்தர்களும் சாந்தியும் சமாதானமும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக மலர வாழ்த்துக்கள் கூறியதுடன் கடந்த ஆண்டு இம் மாவட்டத்திற்கு சிறந்த சேவையினை வழங்கிய அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
.
கடந்த ஆண்டு மாவட்டத்தின் சகல துறைகளிலுமே மாவட்ட செயலகம் சாதனைகளை படைத்திருந்தமையும் இந்த இடத்தில் குறிப்பிட்டு ஆக வேண்டும் என்றும் மலர்ந்து இருக்கும் இப்புத்தாண்டில் கடந்த ஆண்டைவிட இவ் ஆண்டில் அதிக சாதனைகளை படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.