11 மாணவர்கள் 3ஏ பெற்று மட்டு. மேற்கில் வரலாற்று சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 11மாணவர்கள் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையில்   3ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
இது வலயத்தில் வரலாற்று சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வலயத்தில் 97மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் ,  11 மாணவர்கள் 3ஏ சித்திகளையும்,  16மாணவர்கள் 2ஏ, வீ சித்திகளையும்,  9மாணவர்கள் 2ஏ, சீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
97 மாணவர்களில் 68பேர் கலைத்துறைக்கும்,  13பேர் வர்த்தகதுறைக்கும்,  ஒரு மாணவர்  வைத்தியதுறைக்கும்,  3பேர் உயிரியல் விஞ்ஞான துறைக்கும்,  7பேர் பௌதீக விஞ்ஞான துறைக்கும்,  1நபர் பொறியியல்
தொழிநுட்ப  துறைக்கும்,
5பேர் விஞ்ஞான தொழிநுட்ப துறைக்குமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் 34வது மாவட்ட நிலையை பெற்று வைத்தியதுறைக்கு தெரிவாகி உள்ளமையுடன்,  முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கற்ற மாணவர் ஒருவர் பொறியியல் தொழிநுட்ப துறையில் தேசிய ரீதீயாக 154 நிலையை பெற்றுள்ளமையும் எடுத்துக்காட்டதக்கது.
இப் பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கும்,  பெறுவதற்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும்,  வழிகாட்டிய அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களையும்,  பாராட்டுக்களையும் மட்டக்களப்பு சமூகத்தினர் தெரிவித்தனர்.
பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக வகுப்புக்கள்,  ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு,  வழிகாட்டல், கலந்துரையாடல்,  சமூகத்தின் ஒத்துழைப்புகள் காரணமாக இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.