முனைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் வெள்ளநிவாரணப்பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர்உணவுப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை முனைப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு பிரதேசசெயலாளர் நல்லையா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் 500 குடும்பங்களுக்கு 12இலட்சம் பெறுமதியான உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
குடும்பத்துக்கு தலா 2400 ருபா பெறுமதியான உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக முனைப்பின் இலங்கைக்கிளைக்கான தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.
உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்கஅதிபர் மா.உதயகுமார், அமைப்பின் தலைவர் மா.சசிகுமார் செயலாளர் ;இ.குகநாதன் , பொருளாளர் அ.தயானந்தரவி உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உடுதுணிகளும் வழங்கப்படவுள்ளதாக முனைப்பு சுவிஸ் தலைவர் மா.குமாரசாமி தெரிவித்தார்.