திகிலிவெட்டை மக்களை இயந்திர படகு மூலம் மீட்கும் வாழைச்சேனை சபை

சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான இயந்திரம் பழுதாகிய நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையால் மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததையடுத்து வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் முயற்சியால் மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு நீர்வழிப்பாதை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழமையான தூரத்தை விட ஆறு மடங்கு அதிகமான தூரத்திற்கு தற்போது நீர்வழிப் பயணம் காணப்படுகின்றது. அதேவேளை மக்களுக்கான போக்குவரத்து சேவை இலவசமாக நடாத்தப்பட வேண்டுமென்று தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

சந்திவெளி, திகிலிவெட்டை பகுதிக்கு தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் சபை உறுப்பினர்கள் நேரில் சென்று மக்களை இயந்திர படகு மூலம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டனர்.