அம்பாறை – திருமலை சொகுசுபஸ் விபத்து!

காரைதீவு  நிருபர் சகா

திருமலை செல்லும் சொகுசு மினிபஸ்ஸொன்று நேற்று சம்மாந்துறையில் விபத்துக்குள்ளானது.

தினமும் அம்பாறையிலிருந்து திருகோணமலை செல்லும்குளிருட்டப்பட்ட சொகுசு மினிபஸ் ஒன்று நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை  சம்மாந்துறை வீரமுனைஆண்டியடிச்சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகுக்குள் அருகேயுள்ள வாய்க்காலுக்குள்   வீழ்ந்துள்ளது.

வானில்பயணம்செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறுசிறு காயங்களுடன் தப்பினர். வீதிக்கு சமாந்தரமாக கானுக்குள் வீழ்ந்துகிடந்த மினிபஸ்சைக்காண சிறுவர்கள் தொடக்கம் வயோதிபர் வரை படையெடுத்தனர்.

சம்மாந்துறைப்பொலிசார் விபத்துபற்றி விசாரணை நடாத்தியுள்ளனர்.