14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம அபிவிருத்தி திட்டம்

கிராமத்தில் வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான சந்தர்ப்பம் மேம்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்ட சபிரி கமக் என்ற பெயரில் பொது மக்களின் பங்களிப்புடன் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்;ப்பித்துள்ளார் என்றும் இந்த வேலைத்திட்டம் மக்களின் பங்குபற்றுதலுடன் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்விலான அமைச்சரவை தீர்மானம் பின்னவருமாறு:
கிராம வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துதல் அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்ட சபிரி கமக் என்ற பெயரில் பொது மக்களின் பங்களிப்புடன் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நாட்டில் உள்ள 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குள் ரூபா 2,000,000 பெறுமதியைக்கொண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதன் வேலைத்திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ பிரதமர் மற்றும்; கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும், அடுத்த மாதத்தில் இருந்து தலா 20 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்து என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மின்சாரம், பாடசாலை, பாலம், வீதி போன்றன இதன் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் குறைந்த கல்வித் தகமைகளைக் கொண்ட ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பது இதன் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் கிராமிய விவசாயத்துறையை கட்டியெழுப்பும் வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. கறுவா, மிளகு, மஞ்சள், உளுந்து போன்ற உற்பத்திகளை நாட்டில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணரத்ன சுட்டிக்காட்டினார். குறித்த பொருட்களின் இறக்குமதி தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தற்போது, முதலீடு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

30 அடுக்கு மாடிகளைக் கொண்ட பல்நோக்கு கட்டிடத் தொகுதி கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 250 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். யக்கல ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் அழகியற் கற்கைகள் பல்கலைக்கழகத்தில் நிலவும் மாணவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகங்களின்; கட்டமைப்பை வலுப்படுத்த இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கல்வித்துறையில் புதிய யோசனைகளை அமுல்படுத்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.