மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு  கோரிக்கை

நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இன்று (18) விஜயம் செய்துள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை கண்டறிவது தேரரின் விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்த தேரர், குறித்த பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு  கேட்டுள்ளார்.(DC)