சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! : திக்கோடையில் சம்பவம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட திக்கோடைப் பிரதேசத்தைச்சேர்ந்த 37 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கூலித்தொழிலாளியான  குறித்த தந்தை  ஜனவரி மாதம் முதல் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை  தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று இரவு குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொஸார் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.