அரச நிறுவனங்களின் தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்!

அரச நிறுவங்கள் சிலவற்றிற்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான சேவை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சுயாதீன தொலைகாட்சி சேவை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கான தலைவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கிமாலி பெர்னாண்டோ இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கீல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்காக  வணிக உலகில் ஆதிக்கம் செலுத்தும் சொப்ட்லொஜிக்  குழுமத்தின் நிறுவுனர் அசோக் பதிரகே பெயரிடப்பட்டுள்ளார்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக சிறிபால அமரசிங்கவும், லலித் பியும் பெரேரா சுயாதீன தொலைகாட்சி சேவையின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பதில் பணிப்பாளராக ஜயந்த கெடகொட பெயரிடப்பட்டுள்ளார்

LNW