அரச அதிபர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேச ;செயலகப்பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் நேரில் சந்தித்து அங்குள்ள நிலைமையை கேட்டறிந்து அங்குள்ள மக்களின்  இயல்பு வாழ்க்கையைக் கேட்டறிந்து உரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 1664 குடும்பங்களைச் சேர்ந்த 5868 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரான் பிரதேச செயலக அறிக்கை தெரிவிக்கின்றன.

கிரான் பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க அதிபர் இயந்திரப் படகுகள் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.