காரைதீவில் வெள்ளம் மிகமோசமாகப் பாதிப்பு: 20ஆயிரம்பேர் பாதிப்பு:100குடும்பங்கள் இடம்பெயர்வு

அம்பாறை மாவட்டத்தில் மழைவெள்ளத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட காரைதீவுக்கிராமத்தில் (5)வியாழக்கிழமை பகல் பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் விஜயம் செய்து வெள்ளத்துள் சிக்குண்டுள்ள மக்களைப்பார்வையிட்டதுடன் வீதி வடிகான்களை அவரே சுத்தம் செய்ததுடன் வெள்ளநீரை கடலுக்குள் வெட்டிவிட்டு ஜேசிபி உதவியுடன்கடலரிப்பைத் தடைசெய்வதையும் காணலாம்.
வீடுவாசல்களிலெல்லாம் வெள்ளம் ஏறியுள்ளது.சுமார் 100குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சமைத்தஉணவு வழங்க தவிசாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.