ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல்.?

0
296

2020 மார்ச்  மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதாயின் ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அது தொடர்பான இறுதி முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தான் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும் அதன் உறுப்பினராக தொடர்ச்சியாக கடமைபுரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் அதிகரித்த சிக்கல் தன்மையை தீர்ப்பதற்காக கட்டுப்பணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான சட்டமூல  வரைவு தயாரித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அஞ்சல் வாக்களிப்பை மேற்கொள்ளும் முறையைத் தயாரிக்க 2025ற்குள் கட்டாயமாக சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரண தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.