காட்டுயானைகள் தொடர்பாக அரசாங்கம் சரியான திட்டத்தை அமுல்படுத்தவில்லை.

மட்டக்களப்புமாவட்டத்தில் மனிதர்களுக்கும், விவசாயத்திற்கும் ஆபத்தை உண்டாக்கும் காட்டுயானைகள் தொடர்பாக அரசாங்கம் சரியான திட்டத்தை அமுல்படுத்தவில்லை. இது பொருளாதாரத்தையும் அழித்து, மக்களை இடம் பெயரவைத்து, குடியிருப்பு பகுதிகளையும் காடுகளாக மாற்றும். எனவே காட்டு யானைகள் தொடர்பாக சரியான திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் (கௌரவஅமைச்சர் விமலவீரதிஸநாயக்க),வனவிலங்கு அமைச்சர் அவர்களுக்கு விரிவான கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்புமாவட்டத்தில் கோறளைப்பற்றுவடக்கு (வாகரை), கோ.ப.தெற்கு(கிரான்) ஏ.பற்று (செங்கலடி), ம.மேற்கு(வவுணதீவு), ம.தெ.மேற்கு(பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி) போன்ற பிரதேசசெயலாளர் பிரிவுகளில் 2006ம்ஆண்டு தொடக்கம் 2019ஆண்டு வரையும் காட்டுயானைகள் மக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணி வருவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, அண்ணளவாக எல்லைப்புறங்களிலுள்ள மக்கள் பத்துக்குமேற்பட்ட எல்லைக்கிராமங்களை விட்டு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளன, கடந்த  வருடங்களில் 900ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை  காணிகளும், 600ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகாணிகளும்,சுமார் பத்தாயிரத்திற்குமேற்பட்ட பயன் தரும் சிறிய மரங்களான (மா,பாலா,வாழை,முந்திரிகை,தென்னை,பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

யானைகளினால் தாக்கப்பட்டு 75ற்கு மேற் பட்டவர்கள் காயமடைந்த நிலையில்,55ற்க்கு மேற்பட்டோர் இறந்த நிலையில் இத்தோடு வேளாண்மைச் செய்கை ஒவ்வொருபோகமும் குறைந்தது 250ஏக்கர் முழுமையாக பாதிப்படைந்த நிலையில்,200க்கு மேற்பட்டவீடுகள் பகுதிச் சேதமாகவும், 50க்கு மேற்பட்டவீடுகள் முழுச்சேதமாகவும் இந்த குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந் நடவடிக்கை தொடருமானால் எல்லைக்கிராமங்களை கைவிட வேண்டிய நிலைக்குமக்கள் தள்ளப்படுவார்கள்.

ஒருபக்கம் யானைகள் தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. அடுத்த பக்கம் யானைகளின் அழிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. 13வருடங்களாக வனவிலங்கு திணைக்கள உத்தியோகத்தர்கள் கிராமத்திலுள்ள அமைப்புக்கள், கிராமசேவையாளர்கள், பிரதேசசெயலாளர்கள், அரசாங்கஅதிபர் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகள் வரை சிறப்பான சேவைகளை ஆற்றிவருகின்றனர். இச் சிறப்பான சேவைகளை ஆற்றியும் யானைகளினால் மேற்கொள்ளப்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
தற்போது மழைகாலம் ஆரம்பித்து உள்ளதால் விவசாயிகள் விவசாய மேட்டுநிலப் பயிர்கள், வேளாண்மைச் செய்கை, செய்துபூவும்., பிஞ்சுமாக உள்ள நிலையில் என்றும் இல்லாதவாறு பலகாட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் புகுந்து பயன் தரும் மரங்கள், விவசாயமேட்டுநிலப் பயிர்கள்,வேளாண்மைச் செய்கை, ஏனைய மக்கள் வாழும் வீடுகள் போன்றவற்றை அழித்தும், சேதப்படுத்தியும் சில மனிதர்களுக்கு உயிராபத்தையும், ஏற்படுத்திவருகின்றது.
நிரந்தரமாக யானைகளின் அழிவுகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின்
(1)எல்லைக்கிராமங்களிலுள்ள யானை வேலிகளுக்கு குறைந்தது 5கிலோமீற்றர் தூரத்திற்கு இரண்டு ஊர்காவல் படையினரை 24மணிநேரமும் கடமையில் ஈடுபடுத்தி இவர்கள் ஊடாக, மின்இணைப்பு நிலையங்களைப் பாதுகாத்தல்,யானைகளினால் சேதமாக்கப்படும் யானைவேலிகளைத் திருத்துதல், வேலிகளை உடைக்கவரும் யானைகளைத் தடுத்தல்
(2)குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்ள சிறிய பற்றைக்காடுகளை துப்பரவு செய்தல்

(3) எல்லைக் கிராமங்களில் மின்சாரவசதி இல்லாத இடங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்துதல்

(4)எல்லைப் பகுதியிலுள்ள மக்களையானைகளில் இருந்துபாதுகாப்பதற்குஅம் மக்களைபயிற்சிஅளித்து இரவுக் கடமைகளில் ஈடுபடுத்திஒருவிசேடகொடுப்பனவைவழங்குதல்

(5)குறைந்ததுயானைவெடிகளைகிராமசேவையாளர் அல்லது,பொதுஅமைப்புக்கள் அல்லது. வனவிலங்கு இலாகாஉத்தியோகத்தர்கள் வாரத்திற்குஒருதடவைவிவசாயிகளுக்குவிநியோகிக்கவேண்டும்.

(6)யானைகள் விவசாயச்செய்கைக்குபாதிப்பைஏற்படுத்தும் போதுஅவ்விவசாயிகளுக்கும் யானைகளுக்குமிடையில் பாரியமோதல் ஏற்படும். இதிலிருந்துவிவசாயப்பயிர்களையும்,விவசாயிகளையும் பாதுகாக்கவேண்டும்.

(7)வேளாண்மைச் செய்கை,மேட்டுநிலப்பயிர் செய்கைஅறுவடைமுடிந்தபின் இவ் யானைகள் வீடுகளிலுள்ளதானியவகைகளையும்,மரங்களையும் அழிக்கின்றன.இதற்கும் மாற்றுத்திட்டம் அவசியம்.

(8)யானைகளினால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் பிரேதத்தைவிரைவாகஎடுப்பதற்கும்,காயமடைந்தவர்களுக்கான நஸ்டஈட்டைபெறுவதற்கும் நடவடிக்கைஎடுத்தல்

(9)யானைவேலிகள் ஊடாக யானை வேலிகளை சேதப்படுத்தி கிராமங்களுக்குள் செல்லும் யானைகளை யானை ஓரமாக நின்றுதடுத்தல்.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எல்லைக்கிராமங்களிலுள்ளமக்கள் மேட்டுநிலப்பயிர் செய்கை செய்ய முடியாது, வேளாண்மை செய்ய முடியாது,மரங்கள் நாட்டமுடியாது,வீடுகள் கட்டமுடியாது, இரவுநேரங்களில் நடமாடமுடியாது, கால்நடைகள் மேய்க்கமுடியாது, பலநூற்றுக்கணக்கான விவசாயிகள் இரவுநேரங்களில் நித்திரைமுளித்துவிட்டு,பகல்நேரங்களில் வேலைக்குச் செல்லமுடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில் அனைத்தையும் இழந்தவர்களாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வறுமை தலை தூக்கி உள்ளதால் வறுமைகளைப் போக்குவதற்கும், பயன் உள்ளமரங்களை மீண்டும் நடுவதற்கும் நடவடிக்கை எடுப்பதோடு,மக்களையும்,விவசாயத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.