தோட்டக்காட்டான்” என்ற பேச்சை அதாவுல்லா வாபஸ் பெறவேண்டும் – ஜெயசிறில்

சகா

நேற்று தனியார்தொலைக்காட்சியொன்றில் முன்னாள் அமைச்சர்களான எ.எல்.அதாவுல்லா மனோகணேசன் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கலந்துகொண்ட மின்னல் நிகழ்ச்சியில் அதாவுல்லா பயன்படுத்திய தோட்டக்காட்டான் என்ற படுமோசமான பேச்சு ஒட்டுமொத்த தமிழ்ச்சமுகத்தையும் பாரதூரமாகப புண்படுத்தியுள்ளது. அவருக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். உடனடியாக அவர் அப்பேச்சை வாபஸ்பெறவேண்டும்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் (25) சபைஅமர்வில் உரையாற்றுகையில் ஆக்ரோசமாக தெரிவித்தார்.

அவர்மேலும் உரைநிகழ்த்துகையில்:
சிறுபான்மை மக்களிடையே குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் நோக்கில் இக்கதையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல ஊடகத்தின்முன் “அவன் இவன் மடயன்” என கீழ்த்தரமான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியிருப்பது அவரின்கீழ்த்தனத்தைச் சுட்டிக்காட்டிநிற்கிறது.

ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கி கேவலமான சொற்பிரயோகத்தை பாவித்தமைக்கு  ஒரு கட்சியின் தலைவர் அதாவுல்ல செயற்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எமது சபையும் காரசாரமாக கண்டிக்கிறது.
எதிர்காலத்தில் இப்படியான பேச்சைஅவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் மூவினங்களையும் அனுசரித்துப்போகக்கூடிய கட்சியிலோ அல்லது அமைச்சர் பதவியிலோ அவரை அமர்த்தக்கூடாது.

அரசாங்கத்தில் எந்த அந்தஸ்தையும் அவருக்கு வழங்கக்கூடாது. சிறுபான்மையினரால் ஜனாதிபதியான கோட்டபாய இதனைக்கவனத்தில்கொள்ளவேண்டும்.

ஏலவே இனரீதியாக செயற்பட்ட அமைச்சர்களால்தான் அந்த அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. இவரைப்போன்ற இனவாதிகளை அமைச்சராக நியமித்தால் இவரும்அப்படியே நடந்துகொள்வார்.