ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒருமித்த நாடு என்பதை கோடிட்டு காட்டியுள்ளது!

பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இலங்கை ஒருமித்த நாடு அது ஒருநாடல்ல என்பதை தெளிவாக கூறுபோட்டு காட்டியுள்ளது. இதனை ஏற்று தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டிய அவசியம் புதிய ஜனாதிபதி கொட்டபாயாவுக்கு உண்டு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடகவியாளர் கேட்டபோது தொடர்ந்து கருத்துகூறுகையில்.
வடக்கு கிழக்குமக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்பட்டு கடந்த 2009 ம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற 2010,ம் ஆண்டு,2015,ம் ஆண்டு,2019,ம் ஆண்டு தற்போதய தேர்தல் அனைத்திலும் ஒருநிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் அன்னம் சின்னத்துக்கே வாக்களித்தனர் இதில் 2010,ம் ஆண்டு தேர்தலிலும் தற்போதய 2019, தேர்தலிலும் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்தவர் வெற்றிபெறவில்லை,கடந்த 2015,ஜனாதிபதி தேர்தலில் மட்டுமே வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்தவர் அதாவது மைத்திரி ஜனாதிபதியாக தெரிவானார்.
2010, ம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஜனாதிபதியாக தற்போதய பிரதமரும் தற்போதய ஜனாதிபதி கோட்டபாயவின் சகோதரனுமான மகிந்த ராஷபக்ஷ அவர்கள் தெரிவான போதும் அவருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக பல சுற்றுப்பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.
பல விடயங்களில் மகிந்தராஷபக்‌ஷ அவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு விடயங்களுக்கு முடிந்தவரை தீர்வு வழங்குவதாக பல சந்தர்பங்களில் பாராளுமன்றத்திலும் சர்வதேச இராஜதந்திரிகள் முன்பாகவும் குறிப்பாக இந்தியபிரதமர் மோடி முன்னிலையிலும் வாக்குறுதிகள் வழங்கிய சந்தர்ப்பங்கள் பல உண்டு.
இருந்த பொது அது நிறைவேற்ற வில்லை என்பது மறுபுறம் இருந்தாலும் அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சிதான் 2015,ல் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரி தலைமையில் நல்லாட்சி அரசில் முன் எடுக்கப்பட்டு புதிய அரசியல் யாப்பு யோசனை பாராளுமன்றத்தில் முன்எடுக்கப்பட்டது அதனூடாகவே அரசியல் தீர்வு வடக்கு கிழக்கு மக்களுக்கு வரும் என்ற நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கையின் அடிப்படைநில்தான் சம்மந்தன் ஐயா நல்லாட்சி அரசை நம்பி தீபாவளி,பொங்கல்,சித்திரைவருடம் என அதற்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டினார் அந்த நம்பிக்கை எமக்கு ஊட்டப்பட்டாலும் அதன் பிரதிபலிப்பு சர்வதேசத்துக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது ஆனால் அதுவும் கைகூடாத தேக்கநிலைநில்தான் தற்போதய ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று புதிய ஜனாதிபதியாக கோட்டபாயராஷபக்ச அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தல் முடிவும் தெளிவான ஒரு செய்தி வெளிக்காட்டப்பட்டுள்ளது யார் ஜனாதிபதியாக தெரிவானாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற உண்மை மீண்டும் இந்த தேர்தல் முடிவு வெளிக்காட்டியுள்ளது.
புதிய ஜனாதிபதி கோட்டபாயராசபக்ச அவர்கள் தமது பதவி ஏற்பு நிகழ்வில் அனைத்து இலங்கை மக்களும் தம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தம்மை தெரிவுசெய்தவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களே என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
அனைத்து இலங்கை மக்களுக்குமான ஜனாதிபதியாகவே எல்லா தேர்தல்களிலும் தெரிவாகும் ஜனாதிபதிகள் உள்ளனர் அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை இருந்தபோதும் இரங்கை நாட்டில் வடக்குகிழக்கு தமிழ்மக்கள் நீண்டகாலமாக தமது உரிமைக்காக ஒருமித்த நாட்டுக்குள் தனித்துவமாக தமது அரசியல் அபிலாஷைகளை வேண்டி கடந்த 71, வருடங்களாக பல வழிகளில் போராடிவருகுறார்கள் யார் ஐனாதிபதியாக தெரிவானாலும் அவர்களின் பிரச்சனை தீர்கப்படவில்லை என்ற செய்திதான் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிக்காட்டப்படுகிறது.
இதனை புரிந்து கொண்டு தற்போது புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டபாயராஷபக்ச அவர்கள் வடக்குகிழக்கு தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்பதே இந்த தேர்தல் பெறுபேறு வடக்கு கிழக்கு மக்களின் தனித்துவத்தை கோடிட்டு காட்டுயுள்ளது.
தற்போதய ஜனாதிபதி பதவிக்காலம் நான்கு அல்லது ஜந்துவருடம் முடிவுற்றாலும் மீண்டும் அடுத்த தடவையும் தற்போதய ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளது அந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டுமாயின் அடிப்படை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக ஒரு நிரந்தர தீர்வை காண தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் அதன் தலைவர் சம்மந்தன் ஐயாவுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அரசியல் தீர்வு திட்டத்தை வழங்க வேண்டிய அவசியத்தை இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கோடிட்டுக்காட்டியுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.