ரணில் அரசியலிருந்து ஓய்வு பெற முடிவு.?

U.N.P தலைவர் ரனில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மிக விரைவில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  U.N.P யின் தலைமைப்பதவி  வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கட்சியின் பெரும்பான்மை கருத்தை எப்போதும் கவனிக்கும் ஒரு தலைவராக கட்சித் தலைமையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக ரனில் விக்ரமசிங்க தனது நெருங்கிய  நண்பர்களிடம்  கூறியுள்ளார்

அரசியலில் இருந்து விலகுவதற்கான தனது திட்டங்களை விரைவில் அறிவிப்பதாக விக்ரமசிங்க கூறியுள்ளார்.