அம்பாறையிலும் வெற்றிக் கொண்டாட்டம்

0
221
பொதுஜன பெரமுனவின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட்ட கோட்டபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. குறிப்பான ஞாயிற்றுக்கிழமை(17) அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை காரைதீவு கல்முனை சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த வெற்றியை கொண்டாடும் முகமாக  இனிப்புப்பொருட்கள் வீதியில் சென்றவர்களுக்கு பகிர்ந்து வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இது தவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை முன்னெடுத்தவர்கள் புதிய ஜனாதிபதி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என ஊடகங்களிடம் கருத்துக்களை முன்வைத்தனர்.
இப்பகுதியில்  பெரும்பாலான வியாபார நிலையங்கள்  பூட்டப்பட்டு காணப்பட்டதுடன்  பொதுஜன பெரமுனவின் கட்சி ஆதரவாளர்கள் பொதுமககள்  இவ்வெற்றி  கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.