அமைச்சர்கள் சிலர் இராஜினமா

0
229

மைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தாம் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இராஜினாமா செய்வதாகவும் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஹரின் பெர்னாண்டோ, தனது மக்கள் சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.