புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் நாட்டின் தலைவர்கள்

மாலைதீவு ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவு ஜனாதிபதி Maumoon Abdul Gayoom வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை விடுத்து கோட்டாபய ராஜபக்விற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய பிரதமர்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்பொழுது வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான சகோதரத்துவ உறவை வலுப்படுத்தி முன்னெடுப்பதற்கும் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காகவும் நெருக்கமாக தான் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பாகிஸ்தான்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பாகிஸ்தான் இலங்கை வளமான மற்றும் அமைதியான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை தொடர்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை அரசாங்கமும் சுதந்திரமான நியாயமானதுமான தேர்தலை நடத்தியுள்ளதை இட்டு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே வலுவடைந்துள்ள இரு தரப்பு உறவுகளை புதிய ஜனாதிபதி தலைமையிலான குழுவின் கீழ் மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் நாட்டு தலைவர் மேலும் எதிர்பார்த்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.