இளம் சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் நாம் மேற்கொள்ளக் கூடாது – அரச அதிபர்

இளம் சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் நாம் மேற்கொள்ளக் கூடாது.  மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்.

இளம் சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் நாம் மேற்கொள்ளக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விரிசல் ஏற்படக்கூடிய எல்லைப் பிரதேசங்களுக்கு அரச, அரச சார்பற்ற சிவில் அமைப்புக்களின் உதவியுடன்  சர்வமாத  உறுப்பினர்களும் தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்களும்  நேரடியாக சென்று இன நல்லுறவை ஏற்படுத்தும் செயற்பாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 10.11.2019 ஆரையம்பதியில் இடம்பெற்றது.
தேசிய சமாயதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றி அரசாங்க அதிபர்,
சமூகங்கள் ஐக்கியப்படுவதற்கான களத்தை நாம் எல்லோருமாக இணைந்து அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இளம் சமூகத்தினரை நாம் பிரித்து வைக்கும் எந்த செயற்பாட்டையும் இனிமேல் உருவாக்கக் கூடாது. பெற்றார் சமூகம் மதம் ஆகிய தரப்புக்களின் தலையீட்டினால் பிரிவனைகள் அதிகரித்து விட்டது.
சமூகத்திலுள்ள அனைத்து இன மதத்தினரும் இணைந்து, வளர்ந்து, கற்று, வாழ்ந்து பணி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இருந்த இந்த சூழல் விரும்பத் தகாத நிலைமைகளால் விடுபட்டுப் போனது. மும்மொழி கலந்த மொழிக் கல்வியால் பேதங்கள் இல்லாமற் போகும் என்பது தற்போதைய சிந்தினைகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
வளங்கள் சரியாகப் பங்கிடப்பட்டு வெளிப்படத் தன்மையுடன் இருக்க வேண்டு:ம். சமாதானத்துக்ககான ஏற்பாடுகளைச் செய்வதிழல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஏப்ரில் குண்டுத் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கபப்ட்டு விட்டது.
கடவுள் இல்லை என்று மறுக்கும் கொள்கையுடைய  நாஸ்திகர்கள் அமைதியாக அழிவுகளைத் தோற்றுவிக்காது வாழும்பொழுது கடவுள் நம்பிக்கையில் பற்றுறுதியாக இருக்கும் நாம் எத்தனை மடங்கு அமைதியான அறநெறிகளைப் பிற்பற்றி வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுகின்றன.
எனவே நாம் சிறந்த விழுமியங்களையும் ஆன்மீகப் பெறுமானங்களையும் நன்நெறிகளையும் கொண்டு முன்மாதிரியாக வாழ வேண்டும்.
நாம் ஏற்கெனவே நம்மிடத்தே குடிகொண்டுள்ள வன்மங்கள், பொறாமையுணர்வுகள், பாரபட்சங்கள் பேதங்களை சிறுவர்களிடம் ஊட்டி வளர்க்காது அடுத்தவர்களை நேசிப்பவர்களாக சிறுவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார்.