ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் அனைத்துப்பட்டதாரிகளுக்கும் வேலை

நான் ஆட்சிக்கு வந்து 4 மதங்களுக்கு 2018 ஆம் ஆண்டு வரைக்கும் பட்டம் பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்குவேன்.
நான் ஆட்சிக்கு வந்து 4 மதங்களுக்கு 2018 ஆம் ஆண்டு வரைக்கும் பட்டம் பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்குவேன். என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மற்றும், அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் மேற்படி வெட்பாளருக்குமிடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சனிக்கிழமை (09) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது அமைச்சர் தாயா கமகே, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோகித போகல்லாகம, மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சஜித் பிரேமதாஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…..
எனக்கு சாதி, மத, இனவேறுபாடுகள், கிடையாது, இந்த மாவட்டத்தில் அதிகளவு வீட்டுத்திட்டங்களை அமைத்துக் கொடுத்துள்ளேன். வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் தற்காலிகமாக கடமையாற்றிவந்த அனைத்து தொழில்நுட்ப உத்தியோகஸ்த்ர்களுக்கும் நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
எனவே நான் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்குள் 2018 ஆம் ஆண்டு வரைக்கும் பட்டம் முடித்த உள்வாரி, வெளிவாரி, எச்.என்.டி.ஏ என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் தொழில் வழங்குவேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
sakthi