தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை (11/11/2019 ) திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி  உப்போடை  துளசிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
.
பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , ஊடகபேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்,
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளெட்) கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் உட்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாநில, உள்ளூர் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.