மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமத்துக்குள் புகுந்த 12அடி நீளமான ஓர் ராட்சத முதலை.

0
1212

பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் இன்று இரவு மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமான ஓர் ராட்சத முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் பதட்ட நிலமை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதேச இளைஞர்களின் துணிகர முயற்சியால் குறித்த இராட்சத முதலை பிடிக்கப்பட்டு பின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதுடன் கால்நடைகள் பலவும் காணமல் போய் வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி Janathan Alfred