மட்டக்களப்பில் த.தே கூட்டமைப்பினரை சந்தித்த சஜித்திடம் எழுத்துமூலமான கோரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

0
276

 

தமிழ்த் தேசியகூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச
அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்புக் கல்லடியிலுள்ள Green
Garden இல் இன்று பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது முக்கியமான சில விடயங்கள்
கலந்துரையாடப்பட்டதுடன், எழுத்து மூலமான கோரிக்கையும்
கையளிக்கப்பட்டது.தேசிய பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வு
* கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முழுமையாக்குதல்
* தொழிற்சாலை அமைத்தல்
* பாலங்களை அமைத்தல்
*வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவாகத் தொழில்வாய்ப்புகளை
வழங்குதல் இதன்போது உள்வாரிப் பட்டதாரி, வெளிவாரிப் பட்டதாரி,
வெளிநாட்டுப் பட்டதாரி ,எச்.என்.டி.எ பட்டதாரி என்ற பேதங்கள் பார்க்காமல்
தொழில் வழங்குதல்.
* கிரான்புல் அணைக்கட்டினை நிருமணித்தல் .
* அரச ஊடகத்துறையில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் பதவியுயர்விகளின்
போது பாரபட்சம் கட்டாமையை உறுதிப்படுத்தல்
* வீதிகளை புனரமைத்தல்
* விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை என்பவற்றை மேம்படுத்தல்
* மேய்ச்சல் தரைகளைப் பிரகடனப்படுத்தல்
போன்ற விடயங்கள் கோரப்பட்டிருந்தன. இவ் விடயங்களைச் சாதகமாக
கையாளவுள்ளதாக அமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிறேமதாச
அவர்கள் குறிப்பிட்டார். தனது வெற்றியின் பின்னர் ஆக்கபூர்வமான பல
நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பாரபட்சம்
பக்கச்சார்பு இல்லாமல் சகல மக்களுக்கும் சம வாய்ப்புகள், சமத்துவங்களை
வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டார்.
இச் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.ஸ்ரீநேசன்,
சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் தமிழரசுக்கட்சிப் பொதுச் செயலாளர்

கி.துரைராஜசிங்கம், மாநகர முதல்வர் தி.சரவணபவான், ரெலோ அமைப்பின் உப
தலைவர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித்
தலைவர் லோ.தீபாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்