மட்டக்களப்பில் தேர்தல் மேடைகளில் சஜித் பிரேமதாச மட்டு அபிவிருத்தி சம்பந்தமாக அளித்த வாக்குறுதிகள்.

0
875

( வேதாந்தி )
3மாதத்துக்குள் வாழைச்சேனை காகித ஆலை புனரமைக்கப்பட்டு 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.
மண்டூர் பாலம் உட்பட 6 பாலங்கள் மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்படும்.
போரதீவுப்பற்றில் ஆதாரவைத்தியசாலை.
14 பிரதேச செயலகங்களில் கைத்தொழில் பேட்டை.
உன்னிச்சைக்குள நீர்திட்டம் விரிவாக்கப்பட்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீர்.
காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு சகணருக்கும் வீடுகள்,மின்சார வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
கித்துள், உறுகாமம் குளம் விரிவாக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு நீர்வழங்கப்படும்.
வெபர் மைதானம் சர்வதேச மைதானமாகவும்,விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாகும் தரமுயர்த்தப்படும்.
நான் அமெரிக்காவிலிருந்து வந்தவன் அல்ல இந்த மண்ணில் பிறந்து உங்களுடன் வாழ்பவன்.அடியேன் சொல்வதைச்செய்வேன் என்றார்.